7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க
ஏ.ஆர். முருகதாஸ் - சூர்யா கூட்டணியில் உருவாகி 2011ல் வெளிவந்த படம் 7ஆம் அறிவு. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து ஸ்ருதி ஹாசன் நடித்திருந்தார்.
ஜான் ட்ரை நுயொன்
இப்படத்தில் மிக முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ஜானி ட்ரை நுயொன். இவர் சீனாவை சேர்ந்த நடிகர் ஆவார். 7ஆம் அறிவு படத்தில் இவர் செய்யும் ஆக்ஷன், தற்காப்பு கலை நோக்குவர்மம் ஆகியவற்றை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படத்திற்கு பின் அதர்வா நடிப்பில் வெளிவந்த இரும்பு குதிரை படத்திலும் வில்லனாக நடித்திருந்தார். இதன்பின், அவர் தமிழில் நடிக்கவில்லை.
லேட்டஸ்ட் புகைப்படம்
இந்த நிலையில், நடிகர் ஜானி ட்ரை நுயொனின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும், 7ஆம் அறிவு படத்தில் நடித்த நடிகரா இது? ஆளே மாறிவிட்டாரே என ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.
இதோ அவரின் புகைப்படம்..