8 Years Of Mersal: உலகளவில் மெர்சல் படம் செய்த மொத்த வசூல்.. எவ்வளவு தெரியுமா
மெர்சல்
விஜய்யின் திரை வாழக்கையில் திருப்புமுனையாக அமைந்த திரைப்படங்களில் ஒன்று மெர்சல். தெறி படத்தின் வெற்றியை தொடர்ந்து அட்லீயுடன் இரண்டாவது முறையாக விஜய் இப்படத்தில் கூட்டணி அமைந்தார்.
ஶ்ரீ தேனாண்டால் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தை தயாரித்தனர். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க சமந்தா, நித்யா மேனன், காஜல் அகர்வால் ஆகியோர் இப்படத்தில் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். மேலும் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக பட்டையை கிளப்பியிருந்தார். இவர்களுடன் வடிவேலு, கோவை சரளா, சத்யராஜ், சத்யன் ஆகியோர் நடித்திருந்தனர்.
கடந்த 2018ஆம் ஆண்டு தீபாவளிக்கு இப்படம் வெளிவந்திருந்தது. அரசியல் ரீதியாக பல எதிர்ப்புகளை இப்படம் சந்தித்தாலும், மக்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடப்பட்டது.
8 Years Of Mersal
இன்றுடன் இப்படம் வெளிவந்து 8 ஆண்டுகள் ஆகியுள்ளது. இதனை 8 Years Of Mersal என ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில், இப்படம் உலகளவில் செய்த வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, மெர்சல் படம் உலகளவில் ரூ. 250+ கோடி வசூல் செய்திருந்தது. இது விஜய்யின் முதல் ரூ. 250+ வசூல் செய்த படமாகும்.

கனடாவில் வாழ்வாதாரத்திற்காக டாக்சி ஓட்டும் இராணுவ வைத்தியர் - இந்திய பெண் பகிர்ந்த அனுபவம் News Lankasri

15 வயதில் வீட்டின் அறையில் அடைத்த பெற்றோர்! 27 ஆண்டுகளுக்கு பின் 47 வயதில் பெண் மீட்பு News Lankasri
