உலக புகழ்பெற்ற 97வது ஆஸ்கர் அகாடமி விருது வழங்கும் விழா இன்று லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் வெளியான படங்கள் மற்றும் அதில் நடித்தவர்கள், பணியாற்றிய கலைஞர்களுக்கு ஆஸ்கர் விருது வழங்கி கௌரவிக்கப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு 97வது ஆஸ்கர் விருது விழாவில் வெற்றிபெற்றவர்கள் யார்யார் என்று இந்த பட்டியலில் பார்க்கலாம் வாங்க.
- ஏ ரியல் பெயின் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதை வென்றுள்ளார் க்ரீன் கல்கின்.
- சிறந்த அனிமேஷன் படத்திற்கான ஆஸ்கர் விருதை FLOW என்கிற அனிமேஷன் படம் வென்றது.
- சிறந்த ஆடை வடிவமைப்பாளருக்கான விருதை Wicked படத்திற்காக பால் டேஸ்வெல் வென்றுள்ளார். இதுகுறித்து அவர் மேடையில் பேசும்போது, "ஆஸ்கர் வெல்லும் முதல் கறுப்பின மனிதன் நான் தான்" என உணர்ச்சிபூர்வமாக பேசினார். அரங்கமே அவருக்கு எழுந்து நின்று கைதட்டியது.
- CONCLAVE என்கிற படம் சிறந்த தழுவல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.
- சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்திற்கான விருதை THE SUBSTANCE திரைப்படத்திற்காக Pierre-Olivier Persin, Stéphanie Guillon மற்றும் Marilyne Scarselli ஆகியோர் வென்றுள்ளனர்
- சிறந்த படத்தொகுப்புக்கான ஆஸ்கர் விருதை Anora திரைப்படத்திற்காக Sean Baker வென்றுள்ளார்.
- Emilia Perez திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதை நடிகை Zoe Saldana வென்றுள்ளார்.
- சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு விருதை Wicked திரைப்படத்திற்காக Nathan Crowley and Lee Sandales ஆகியோர் வென்றுள்ளனர். இது அவர்களுடைய முதல் ஆஸ்கர் விருதாகும்.
- சிறந்த visual effects-காண ஆஸ்கர் விருதை டியூன் பார்ட் 2 திரைப்படம் வென்றுள்ளது. Paul Lambert, Stephen James, Rhys Salcombe மற்றும் Gerd Nefzer pose ஆகியோர் இந்த விருதை பெற்றுள்ளனர்.
- Gareth John, Richard King, Ron Bartlett மற்றும் Doug Hemphill ஆகியோர் Best Sound விருதை டியூன் பார்ட் 2 படத்திற்காக வென்றுள்ளனர்.
- ‘I’m Not A Robot திரைப்படத்திற்காக சிறந்த Live Action Short என்கிற விருதை Victoria Warmerdam மற்றும் Wim Goossens Trent ஆகியோர் வென்றுள்ளனர்.
- சிறந்த ஒளிப்பதிவிற்கான விருதை The Brutalist திரைப்படத்திற்காக ஒளிப்பதிவாளர் Lol Crawley வென்றுள்ளார்.
- Best International Feature Film என்கிற விருதை ‘I’m Still Here திரைப்படம் வென்றுள்ளது.
- Best Original Score விருதை The Brutalist திரைப்படத்திற்காக Daniel Blumberg வென்றுள்ளார்.
- சிறந்த நடிகருக்கான விருதை The Brutalist திரைப்படத்திற்காக நடிகர் Adrien Brody வென்றுள்ளார்.
- சிறந்த ஆவணப் படத்திற்கான விருதை No Other Land என்கிற ஆவணப்படம் வென்றுள்ளது.
- சிறந்த ஆவணப் படம் short என்கிற பிரிவில், The Only Girl In The Orchestra திரைப்படத்திற்காக Molly O’ Brien மற்றும் Lisa Remington ஆகியோர் விருது வென்றுள்ளனர்.
- சிறந்த திரைக்கதைக்கான விருதை anora திரைப்படம் வென்றுள்ளது. இந்த விருதை Sean Baker பெற்றுக்கொண்டார்.
- Best Animated Short என்கிற பிரிவில் In The Shadow of the Cypress-காக Shirin Sohani மற்றும் Hossein Molayemi விருதை வென்றுள்ளனர்.
- Anora திரைப்படத்திற்காக சிறந்த நடிகை விருதை Mikey Madison வென்றுள்ளார். இது அவருடைய முதல் ஆஸ்கர் விருதாகும்.
- சிறந்த திரைப்படத்திற்கான விருதை Anora திரைப்படம் வென்றுள்ளது.

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan

பெரும் கோடீஸ்வரரின் மகள்... ரூ 48 பில்லியன் சாம்ராஜ்யத்தின் வாரிசு: கணவர் திரைப்பட நட்சத்திரம் News Lankasri

எனக்கு முன்னாடி 4 பேர்; இந்த வேலைக்கு பேர் என்ன? - நடிகை விஜயலட்சுமிக்கு சீமான் பதிலடி IBC Tamilnadu

மன்னர் காலத்து இரும்பு உள்ளாடை: ராணிகளின் ரகசியம் உண்மையா? வைரல் வீடியோவின் அதிர்ச்சி பின்னணி! News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US