ஒத்துக்கொள்ளவே இல்லை, கடுப்பான ஏ.ஆர்.ரஹ்மான் தந்தை.. அவரே உடைத்த ரகசியம்
ஏ.ஆர்.ரகுமான்
மணிரத்னம் இயக்கிய ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஹாலிவுட்டின் உயரிய விருதான ஆஸ்கர் விருதை கடந்த 2008ம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக வென்றார்.
இசையமைப்பாளராக களமிறங்கி 30 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பர் 1 இடத்தை பிடித்து வலம் வருகிறார். தற்போது, இவர் தமிழில் தக் லைஃப், ஜீனி ஆகிய படங்களுக்கு இசையமைக்கிறார்.
ரகசியம்
இந்நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தையான சேகர் குறித்து ஒரு அதிரடி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, ஒரு மலையாள படத்திற்கு என் தந்தை இசையமைத்தார்.
அப்போது எந்த ட்யூனை கொடுத்தாலும் அந்தப் படத்தின் இயக்குநர் ஒத்துக்கொள்ளவே இல்லை. இதனால் கடுப்பான என் தந்தை தேசிய கீதமான ஜன கன மண பாடலின் ட்யூனை மெதுவாக வாசித்தார். இது அந்த இயக்குநருக்கு பிடித்துப்போனது. என் தந்தைக்கு நிறைய சென்ஸ் ஆஃப் ஹியூமர் இருந்தது" என்று தெரிவித்துள்ளார்.

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri
