நான் மட்டும் விதிவிலக்கா?.. தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மனம் திறந்த ஏ.ஆர்.ரஹ்மான்
ஏ.ஆர்.ரஹ்மான்
மணிரத்னம் இயக்கிய ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் ஏ.ஆர்.ரஹ்மான். ஹாலிவுட்டின் உயரிய விருதான ஆஸ்கர் விருதை கடந்த 2008ம் ஆண்டு ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக வென்றார்.
இசையமைப்பாளராக களமிறங்கி 30 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பர் 1 இடத்தை பிடித்து வலம் வருகிறார். தற்போது, இவர் தமிழில் தக் லைஃப், ஜீனி ஆகிய படங்களுக்கு இசையமைக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அவருடைய மனைவி சாயிரா பானு இருவரும் கடந்த 29 வருடங்களாக ஒன்றாக வாழ்ந்த நிலையில் கடந்த வருடம் நவம்பரில் பிரிவதாக அறிவித்தனர்.
விதிவிலக்கா?
இது தொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மான் பொதுவெளியில் இதுவரை பேசாத நிலையில், அண்மையில் ரஹ்மான் அளித்த பேட்டியில் இது குறித்து மனம் திறந்துள்ளார்.
அதில், " நீங்கள் பொதுவாழ்வில் இருக்கும்போது அனைவராலும் விமர்சிக்கப்படுவீர்கள். பணக்காரர் முதல் கடவுள் வரை அனைவருமே விமர்சிக்கபடும்போது, நான் மட்டும் என்ன விதிவிலக்கா?.
எங்களை குறித்து இப்படி தவறாக விமர்சிப்பவர்களுக்கும் குடும்பம் உள்ளது என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.