சன் டிவியில் புதியதாக ஒளிபரப்பாக போகும் ஆடுகளம் சீரியல்... என்று, எப்போது, வெளிவந்த விவரம்
ஆடுகளம்
சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்றால் அது சன் டிவி தான், எல்லோருக்கு தெரிந்த விஷயம் தான் இது.
விரைவில் சன் தொலைக்காட்சியில் இளம் கலைஞர்கள் நடிக்க ஒளிபரப்பாகி வந்த ரஞ்சனி என்ற சீரியல் முடிவுக்கு வரப்போகிறது, இது ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தமான விஷயமாக தான் உள்ளது.
நேரம்
ரஞ்சனி தொடர் முடிவுக்கு வரப்போகிறது என்று செய்தி வரும் நேரத்திற்கு முன்னரே புதிய சீரியலான ஆடுகளம் தொடரின் புரொமோ வெளியாகிவிட்டது.
முதலில் நாயகி, பின் நாயகி இன்ட்ரோவுடன் வந்த தொடர் பணம் தான் எல்லாம் நினைக்கும் ஹீரோவின் அம்மா, பணம் வாழ்க்கை இல்லை சொந்தம் தான் முக்கியம் என இருக்கும் நாயகியை சுற்றிய கதையாக புரொமோ மூலம் தெரிகிறது.
தற்போது இந்த புதிய ஆடுகளம் தொடர் வரும் ஏப்ரல் 7ம் தேதி முதல் ஞாயிறு உட்பட வாரத்தின் 7 நாட்களும் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாம்.