ரசிகர்கள் கொண்டாடிய ஆஹா கல்யாணம் சீரியல் கிளைமேக்ஸ் படப்பிடிப்பு முடிந்தது.. கடைசிநாள் போட்டோ
ஆஹா கல்யாணம்
கடந்த 2023ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாக தொடங்கிய தொடர் ஆஹா கல்யாணம்.
80களில் கலக்கிய நடிகை மெளனிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நாயகன்-நாயகியாக விக்ரம் ஸ்ரீ மற்றும் அக்ஷயா நடித்து வந்தார்கள். இவர்களுடன் காயத்ரி ஸ்ரீ, விபிஷ், ராம், பவ்யா ஸ்ரீ என பலர் நடித்தார்கள்.
இந்த தொடர் Star Jalsha தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Gaatchora என்ற தெலுங்கு தொடரின் ரீமேக்காக ஒளிபரப்பாகி வந்தது.
ஏழ்மையான குடும்ப சூழ்நிலையில் மகள்கள் வளர்ந்தாலும் அவர்கள் பணக்கார வீட்டிற்கு தான் திருமணம் செய்ய வேண்டும் என ஆசைப்படும் அம்மா.
அப்படி நினைத்து அவர் ஒரு மகளின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய அதனால் அவரின் 3 மகள்களும் சந்தித்த பிரச்சனையே இந்த தொடரின் கதையாக அமைந்தது.
வைரல் போட்டோ
600 எபிசோடுகளுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வரப்போவதாக சில வாரங்களுக்கு முன்பே தகவல் வந்தது.
இந்த நிலையில் ஆஹா கல்யாணம் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பும் முடிந்துள்ளது தெரிய வந்துள்ளது. கடைசி நாளின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.