சினிமாவில் இருந்து விலகும் முன்னணி நடிகர்.. அவரே கூறிய அதிர்ச்சி தகவல்
முன்னணி நடிகர்
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் 3 கான்களில் ஒருவர் தான் அமீர்கான். சினிமாவில் அறிமுகமானோம், காதல் படங்கள் நடித்தோம் ஹிட் கொடுத்தோம், பாக்ஸ் ஆபிஸ் நாயகனானோம் என்றில்லாமல் தனித்துவமான கதை தேர்வின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியிருக்கிறார்.
இவர் நடித்த லகான், ஃபனா, ரங் கே பசந்தி, தாரே ஸமீன்பர், 3 இடியட்ஸ், பிகே, தங்கல் என நிறைய மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படங்களை கொடுத்துள்ளார்.

ஒரு படத்திற்கு ரூ. 100 கோடி முதல் ரூ. 175 கோடி வரை சம்பளம் வாங்கும் அமீர்கான் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் லால் சிங் சத்தா இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறாமல் படு தோல்வியை சந்தித்தது.
அதிர்ச்சி தகவல்
இந்நிலையில், அமீர் கான் அவரது சினிமா வாழக்கை குறித்து மனம் திறந்துள்ளார். அதில், "அடுத்த 10 ஆண்டுகளே சினிமாவில் இருப்பேன் அதன் பின், சினமவை விட்டு விலகி என் குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க திட்டமிட்டு உள்ளேன்.

நான் என் 18 வயது தொடங்கி இன்று வரை சினிமாவில் நடித்து வருகிறேன். அதனால் இனி வரும் காலத்தில் எனக்காக இல்லாமல் என் மனைவி மற்றும் குழந்தைகளுக்காக வாழ நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri