ப்ளூ சட்டை மாறனை மேடையில் எச்சரித்த பிக் பாஸ் ஆரி! அஜித் டான்ஸ் பற்றி இப்படியா பேசுறது

Aari Arjunan Valimai Review Blue Sattai Maaran
By Parthiban.A Mar 13, 2022 09:00 AM GMT
Report

பிக் பாஸ் நான்காவது சீஸனின் டைட்டில் ஜெயித்தவர் ஆரி அர்ஜுனன். அவர் தற்போது கைவசம் சில படங்கள் வைத்து இருக்கிறார். தற்போது அவர் அஜித் டான்ஸ் பற்றி விமர்சித்த ப்ளூ சட்டை மாறனை எச்சரித்து மேடையில் பேசி இருக்கிறார்.

வலிமை ட்ரோல்

அஜித் நடித்த வலிமை படம் கடந்த மாதம் ரிலீஸ் ஆனது. அதை மிக மோசமாக விமர்சித்து ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் வெளியிட்டு இருந்தார். அஜித் டான்ஸ் ஆடுவது பரோட்டாவுக்கு மாவு பிசைவது போல இருக்கிறது என அவர் ட்ரோல் செய்து இருந்தார். இதற்க்கு அஜித் ரசிகர்கள் கொந்தளித்து அவருடன் சண்டை போட்டு வந்தனர். மேலும் சினிமா துறை பிரபலங்களும் கூட பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்.

ப்ளூ சட்டை மாறனை மேடையில் எச்சரித்த பிக் பாஸ் ஆரி! அஜித் டான்ஸ் பற்றி இப்படியா பேசுறது | Aari Condemns Blue Sattai Maaran Valimai Review

ஆரி மேடையில் கண்டனம்

இந்நிலையில் நேற்று ஆரி ஒரு படத்தின் விழாவில் பேசும்போது அஜித்தை மோசமாக பேசிய ப்ளூ சட்டை மாறனை விளாசி இருக்கிறார்.

"நீங்கள் படத்தை விமர்சித்து அதில் வரும் பணத்தை பாக்கெட்டில் போட்டு கொள்கிறீர்கள். மல்லாக்க படுத்து துப்பினால் அது உங்கள் மீது விழும். நீங்களும் படம் இயக்கி அது நல்ல படம் என எல்லோரிடமும் சொல்கிறீர்கள், அது போல ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும் உரிமை இருக்கிறது."

"அஜித் தற்போது உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் சுயமாக ஆரம்பகாலத்தில் இருந்து உழைத்து வந்தவர். விமர்சிப்பதென்றால் குறைகளை சுட்டிக்காட்டுங்கள், அதற்காக தரம்தாழ்ந்த விமர்சனம் வேண்டாம். இன்னும் பயிற்சி எடுத்து ஆடி இருக்கலாம் என சொல்லுங்கள், அதற்காக பரோட்டாவுக்கு மாவு பிசைவது போல இருக்கிறது என சொல்வதா. உங்கள் விமர்சனத்தின் தரத்தை முதலில் உயர்த்துங்கள்" என ஆரி கூறி இருக்கிறார். 

அரபிக் குத்து பாட்டுக்கு கடற்கரையில் கிளாமராக ஆடிய ஆஷ்னா! வைரல் வீடியோ

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US