இனி சண்டை இல்லை, வார்த்தை இல்லை!.. வைரலாகும் ஆர்த்தி ரவியின் திடீர் பதிவு
ரவி மோகன்
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் ரவி மோகன். இவர் தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக கடந்த வருடம் கூறியிருந்தார்.
இவர்கள் இருவரும் ஒருவறை ஒருவர் குறை கூறிக்கொண்டு அறிக்கை வெளியிட்ட வண்ணம் இருந்தனர். தற்போது இருவரும் அவர்கள் பணிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
திடீர் பதிவு
இந்நிலையில், ஆர்த்தி ரவி அவரது இன்ஸ்டா தளத்தில் வெளியிட்ட பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " மனது கஷ்டமாக இருக்கும்போது பிரியாணி சாப்பிடுவது ஆறுதல். சண்டைகள் இல்லை, வார்த்தைகள் இல்லை, வாலை ஆட்டி அன்பு காட்டும் செல்லப் பிராணிகள் மட்டும் எனக்கு போதும்.
நடப்பதை அப்படியே ஏற்றுக்கொள்வதில் ஒரு அமைதி இருக்கிறது. இது என் கல்லூரிக் காலத்தில் நான் கற்றுக்கொண்டது" என்று சில கருத்துக்கள் கூறி பகிர்ந்துள்ளார்.

கடும் நிதி நெருக்கடிக்கு நடுவில்.., யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற காய்கறி வியாபாரியின் மகள் News Lankasri
