அது நடந்தால் Uber டிரைவராகிவிடுவேன்.. உறுக்கமாக பேசிய நடிகர் ஃபகத் பாசில்
ஃபகத் பாசில்
மலையாள சினிமாவின் பிரபல இயக்குநரான பாசிலின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நடிக்க களமிறங்கியவர் பகத் பாசில்.
இவர் தனது தந்தை இயக்கிய கையேதும் தூரத்தில் என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து படங்கள் நடித்து முன்னணி நடிகராக வளர்ந்தவர் தமிழில் வேலைக்காரன் படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்தார்.
அதன்பின் சூப்பர் டீலக்ஸ், விக்ரம், மாமன்னன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக ரஜினியுடன் வேட்டையன் படத்தில் நடித்தவர் இப்போது வடிவேலுவுடன் மாரீசன் படத்தில் நடித்துள்ளார்.
டிரைவராகிவிடுவேன்
இந்நிலையில், பேட்டி ஒன்றில் தனது ஓய்வுக்கு பிந்தைய வாழ்வு குறித்து பேசியுள்ளார்.
அதில், " ரசிகர்களுக்கு என் நடிப்பு சலித்துவிட்டால், பார்ஸிலோனாவில் 'ஊபர்' டிரைவராகிவிடுவேன்.
மக்களை ஒரு இடத்தில் இருந்து வேறொரு இடத்திற்கு அழைத்து கொண்டு போய் சேர்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். ஒருவர் சென்றடையும் இலக்கை அறிந்துகொள்வது மிக அழகான விஷயம்" என்று தெரிவித்துள்ளார்.

கடும் நிதி நெருக்கடிக்கு நடுவில்.., யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற காய்கறி வியாபாரியின் மகள் News Lankasri
