பணம் தான் முக்கியம்.. காதல் தோல்வியால் கதறி அழுத நடிகை ஆத்மிகா
நடிகை ஆத்மிகா
தமிழ் சினிமாவில் மீசைய முறுக்கு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. இதன்பின் இவர் நடிப்பில் கோடியில் ஒருவன், காட்டேரி ஆகிய படங்கள் வெளிவந்தன.
சமீபத்தில் கூட உதயநிதியுடன் இவர் இணைந்து நடித்திருந்த கண்ணை நம்பாதே திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படங்களுக்கு இடையே இவர் நடித்த நரகாசூரன் திரைப்படம் சில பிரச்சனைகளால் வெளிவராமல் இருக்கிறது. விரைவில் இப்படம் வெளியாகும் ஏன் எதிர்பார்க்கப்படுகிறது.
காதல் தோல்வி
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த நடிகை ஆத்மிகா தனது காதல் தோல்வி குறித்து பேசியுள்ளார்.
இதில் 'என்னுடைய காதல் தோல்வி தான் என்னை மிகவும் பாதித்தது. என்னை காதலித்தவர் தான் என்னை விட்டு விலகி சென்றார். அது எனக்கு வருத்தத்தை கொடுத்தது. அதை நினைந்து இரவு முழுவதும் அழுதுருக்கிறேன். தற்போது தான் அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு கொண்டு இருக்கிறேன்.
பணமா அல்லது புகழா
வாழ்க்கையில் பணமா அல்லது புகழா முக்கியம் என யாரவது என்னிடம் கேட்டால், நிச்சயம் பணம் தான் என்று கூறுவேன். ஏனென்றால் அதுதான் எதார்த்தம் என்பதை புரிந்துகொள்ளுங்கள்' என கூறியுள்ளார். நடிகை ஆத்மிகா பகிர்ந்த இந்த விஷயங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
அச்சு அசல் அப்படியே ஏ.ஆர். ரஹ்மான் குரலில் பாடிய இசையமைப்பாளர்.. அசரவைத்த வீடியோ

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri
