வசூல் வேட்டை நடத்தும் பகத் பாசிலின் ஆவேசம் திரைப்படம்!! இதுவரை இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா?
ஆவேசம்
இந்தாண்டு துவக்கம் முதலே மலையாள சினிமா தொடர் சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்து வருகிறது.
சமீபத்தில் வெளிவந்த பிரேமலு, Bramayugam, மஞ்சுமெல் பாய்ஸ் போன்ற திரைப்படங்கள் மலையத்தில் மட்டும் மற்ற மொழி திரையுலகினர் மத்தியிலும் கவனம் ஈர்த்தது. தற்போது இந்த லிஸ்டில் ஆவேசம் திரைப்படமும் இணைந்து இருக்கிறது.
பகத் பாசில் நடிப்பில் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவான ஆவேசம் கடந்த வாரம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஜித்து மாதவன் இயக்கத்தில் இதற்குமுன் வெளிவந்த ரோமச்சன் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வசூல்
இந்நிலையில் தற்போது ஆவேசம் திரைப்படத்தின் வசூல் விவரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி இப்படம் இதுவரை ரூ 50 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மணமகனுக்கு ஹெலிகாப்டர், விருந்தினர்களுக்கு ரூ.2.5 கோடி மதிப்புள்ள பரிசுகள்.., திருமண செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri

எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின் IBC Tamilnadu
