மனைவி, நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய பிக்பாஸ் புகழ் அபிநய்- கலக்கல் புகைப்படங்கள்
பிக்பாஸ் 5வது சீசன் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் பிரம்மாண்டமாக தொடங்கியது. நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் இருந்து 5வது சீசனிற்கு மக்கள் நல்ல ஆதரவு கொடுத்து வந்தார்கள்.
பிக்பாஸ் போட்டியாளர் அபிநய்
இந்த 5வது சீசனில் கவனிக்கப்பட்ட பிரபலங்களில் ஒருவர் அபிநய். இவர் சென்னை 28 இரண்டாம் பாகத்தின் மூலம் நன்கு அறியப்பட்டார். ஆனால் அவர் நடித்த சில படங்கள் அவருக்கு சரியாக அங்கீகாரத்தை கொடுக்கவில்லை.
பிக்பாஸ் அல்டிமேட்
5வது சீசனில் இருந்து வெளியேறிய அபிநய் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். ஆனால் அதில் இருந்து சீக்கிரமே வெளியேறிவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து அபிநய் தனது மனைவியை விவாகரத்து செய்கிறார் என்ற செய்தி வெளியாகிக் கொண்டே வந்தன.
பிறந்தநாள் கொண்டாட்டம்
இந்த நிலையில் அபிநய் தனது பிறந்தநாளை மனைவி மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மனைவியுடன் விவாகரத்திற்கு பிறகு மகன்களுடன் சூப்பர் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தனுஷ்- அழகிய போட்டோ