பிக் பாஸ் நடத்தும் சேனலை விளாசிய பிரபல நடிகை! வெடித்த சர்ச்சை
பிக் பாஸ்
விஜய் டிவியில் பிக் பாஸ் 6ம் சீசன் அடுத்த மாதம் இரண்டாம் வாரத்தில் தொடங்கப்படும் என தெரிகிறது. ஆனால் தெலுங்கில் பிக் பாஸ் 6ம் சீசன் ஏற்கனவே தொடங்கி மூன்று வாரங்கள் முடிந்துவிட்டது.
அதில் போட்டியாளராக விஜய்யின் ப்ரண்ட்ஸ் பட நடிகை அபிநய ஸ்ரீ கலந்துகொண்டிருந்தார். அவர் உள்ளே சென்ற இரண்டாம் வாரமே எலிமினேட் ஆகிவிட்டார். இப்படி அவர் போன வேகத்திலேயே வெளியேறிய நிலையில் அது பற்றி அவர் கோபமாக பேட்டி அளித்து இருக்கிறார்.
சேனல் பற்றி புகார்
வெளியில் வந்த பின் அபிநயஸ்ரீ அளித்த பேட்டியில் தன்னை நிகழ்ச்சியில் காட்டவே இல்லை என புகார் கூறி இருக்கிறார். அது பற்றி அவரது அம்மாவே சேனலுக்கு போன் செய்து கேட்டாராம்.
நாமினேஷன் லிஸ்டில் இருந்தாலும் தான் safe zoneல் தான் இருந்ததாகவும், ஆனால் சேனலுக்கு வேண்டியவர்களை மட்டும் வைத்துக்கொண்டு அவர்களே எலிமினேட் செய்துவிடுகிறார்கள். ரசிகர்கள் ஓட்டு அடிப்படையில் தான் எலிமினேஷன் என பொய்யாக சொல்கிறார்கள்.
தமிழில் கமல்ஹாசன் எல்லா போட்டியாளர்களிடமும் பேசுகிறார். ஆனால் தெலுங்கில் அப்படி இல்லை, வேண்டியவர்களிடம் மட்டும் பேசுகிறார்கள் என அபிநயஸ்ரீ குற்றம் சாட்டி இருக்கிறார்.
விஜய் டிவி சீரியல் நடிகை கண்ணீருடன் புகார்.. தவறான லிங்க் மூலம் மார்பிங் போட்டோ லீக்