ஐஸ்வர்யா ராய்யின் கணவர் அபிஷேக் பச்சன் பிரபல நடிகையை காதலித்து திருமணம் வரை சென்றாரா? யார் அந்த நடிகை தெரியுமா
அபிஷேக் பச்சன்
பாலிவுட் பிரபலமான நடிகர்களில் ஒருவர் அபிஷேக் பச்சன். இவர் பாலிவுட் திரையுலகில் மூத்த நடிகரான அமிதாப் பச்சனின் மகன் ஆவர்.
கடந்த 2007ஆம் ஆண்டு நடிகை ஐஸ்வர்யா ராய்யை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஆராத்யா எனும் ஒரு மகளும் இருக்கிறார்.
பிரபல நடிகையுடன் காதல்
இந்நிலையில், ஐஸ்வர்யா ராய்யை திருமணம் செய்துகொள்வதற்கு முன் பிரபல பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரை காதலித்து வந்துள்ளாராம் அபிஷேக் பச்சன்.
இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு காதலித்து வந்த நிலையில், இந்த உறவு திருமணம் வரை சென்றதாக கூறப்படுகிறது.
ஆனால், திடீரென அமிதாப் பச்சன் இந்த திருமணத்திற்கு சம்மதிக்காத காரணத்தினால் இவர்களுடைய காதல் தோல்வியில் முடிந்துள்ளது என பாலிவுட் வட்டாரம் தெரிவிக்கின்றன. இதன்பின் தான் நடிகை ஐஸ்வர்யா ராய்யை கரம்பிடித்துள்ளார் அபிஷேக் பச்சன்.
சரத்குமார் - ராதிகாவின் மகனா இது.. எப்படி இருகிறார் பாருங்க