27 வருடங்களுக்கு முன் நடிகர் அப்பாஸ் எப்படி இருந்தார்- அவரே வெளியிட்ட போட்டோ, லைக்ஸ் குவிக்கும் ரசிகர்கள்
அப்பாஸ்
நடிகர் அப்பாஸ் 1996ம் ஆண்டு காதல் தேசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அப்படத்தின் முதல் சாக்லெட் பாயாக வலம் வந்த அப்பாஸ் அடுத்தடுத்து நிறைய ஹிட் படங்கள் கொடுத்தார்.
பின் இடையில் படங்கள் நடிக்காமல் இருந்த இவர் 2011ம் ஆண்டு தமிழில் கோ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து மீண்டும் என்ட்ரீ கொடுத்தார். கடைசியாக பச்சைக்கள்ளம் என்ற மலையாள படத்தில் நடித்திருந்தார்.
இவர் 2001ம் ஆண்டு எராம் அலி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அய்மான் என்னும் மகனும், எமிரா என்னும் மகளும் உள்ளனர்.
முதல் படம்
நடிகர் அப்பாஸ் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 1996 ஆம் ஆண்டு வெளிவந்த காதல் தேசம் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் அந்த போட்டோவிற்கு அதிக லைக்ஸ் குவித்து வருகின்றனர்.
பிரபல காமெடி நடிகர் சூரியின் மனைவியை பார்த்துள்ளீர்களா?- சமூக வலைதளத்தில் வலம் வரும் ஒரே ஒரு போட்டோ