25 லட்சம் தரேன் உங்களால் 10 வயது குழந்தையை மீண்டும் தரமுடியுமா?.. விஜய்யிடம் எஸ். வி. சேகர் கேள்வி!
விஜய்
ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
கே.வி.என் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பாபி தியோல், நரேன், கவுதம் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்போது அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய். சமீபத்தில் ஏற்பட்ட கரூர் பிரச்சனை தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், நேற்று வேதனை தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இந்த வீடியோ குறித்து பல சினிமா நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் நபர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குழந்தையை தரமுடியுமா?
இந்நிலையில், நடிகர் எஸ். வி. சேகர் இந்த பிரச்சனை குறித்து பேசிய விஷயம் இணையத்தில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், " மன்னிப்பு கேட்கிறவன்தான் பெரிய மனுஷன். 25 லட்சம் தரேன் உங்களால் 10 வயது குழந்தையை தரமுடியுமா?” என்று கேள்வி கேட்டுள்ளார்.