சம்பளத்தை குறைத்துக்கொண்ட நடிகர் அஜித்.. பிடிவாதம் பிடிக்கும் தயாரிப்பாளர்கள்.. AK 64 அறிவிப்பு எப்போது?

By Karthick Raja Jun 13, 2026 05:48 AM GMT
Report

அஜித்

குட் பேட் அக்லி என்கிற மாபெரும் ஹிட் படத்தை கொடுத்த அஜித், அடுத்ததாக யாருடைய இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என எதிர்பார்ப்பு இருந்த நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் தான் மீண்டும் அஜித் இயக்கப்போகிறார் என கூறப்பட்டது. ஏறக்குறைய அது உறுதியான தகவலும் கூட. ஆனால், இப்படத்தை தயாரிக்க தயாரிப்பு நிறுவனங்கள் முன் வரவில்லை என கூறப்படுகிறது. காரணம், அஜித்தின் சம்பளம் என்கின்றனர்.

சம்பளத்தை குறைத்துக்கொண்ட நடிகர் அஜித்.. பிடிவாதம் பிடிக்கும் தயாரிப்பாளர்கள்.. AK 64 அறிவிப்பு எப்போது? | Actor Ajith Kumar Has Adjusted His Remuneration

GBU படத்திற்காக நடிகர் அஜித் ரூ. 163 கோடி சம்பளம் பெற்றார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது சம்பளத்தை ரூ. 185 கோடியாக உயர்த்தினார். இந்த நிலையில், இவ்வளவு பெரிய சம்பளத்தை தருவதற்கு தயாரிப்பு நிறுவனங்கள் தயாராக இல்லை. இதனால் தனது சம்பளத்தை ரூ. 163 கோடியாக குறைத்தார். இருப்பினும் அஜித் தரப்பிலிருந்து தயாரிப்பாளர்களை அணுகினால் அவர்கள் சொல்லும் கணக்குக்கு இந்த சம்பளம் ஒத்துவரவில்லை என கூறுகிறார்களாம்.

ஹபீபி: திரைவிமர்சனம்

ஹபீபி: திரைவிமர்சனம்

சம்பளத்தை குறைத்த அஜித்

இப்படியே கிட்டதட்ட ஒன்றரை ஆண்டு சென்றுவிட்ட நிலையில், தற்போது தனது சம்பளத்தை ரூ. 150 கோடியாக குறைத்துவிட்டாராம் அஜித். இதன்பின் கன்னட திரையுலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனத்தை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா அணுகியுள்ளார். அப்போது அந்த தயாரிப்பு நிறுவனம் கணக்கு போட்டு பார்த்துவிட்டு, இப்படத்தை நாங்கள் தயாரிக்க வேண்டும் என்றால் அஜித்துக்கு எங்களால் ரூ. 90 கோடிதான் சம்பளம் தரமுடியும் என கூறிவிட்டார்களாம். இதனால் இந்த பேச்சு வார்த்தை அங்கேயே முடிந்துவிட்டது.

சம்பளத்தை குறைத்துக்கொண்ட நடிகர் அஜித்.. பிடிவாதம் பிடிக்கும் தயாரிப்பாளர்கள்.. AK 64 அறிவிப்பு எப்போது? | Actor Ajith Kumar Has Adjusted His Remuneration

இதன்பின், மிகப்பெரிய ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் தொழிலதிபர் அஜித்தை வைத்து படம் எடுக்க முன் வந்துள்ளார். அவரை பிரபல ஹோட்டல் ஒன்றில் அஜித்தின் மேலாளர் சந்தித்து, அஜித்தின் சம்பளம் படத்தின் பட்ஜெட் குறித்து பேசியுள்ளார். அப்போது அவர் தன்னுடைய கணக்கு போட்டு பார்த்துவிட்டு அஜித்துக்கு ரூ. 110 கோடி சம்பளம் தருவதாக கூறியிருக்கிறார். அப்படி ரூ. 110 கோடி சம்பளம் கொடுத்தால்தான் தனக்கு லாபம் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், சுரேஷ் சந்திரா ரூ. 150 கோடி என்றால் உடனடியாக இப்போதே படத்தை லாக் செய்துவிடலாம் என கூறியுள்ளார்.

சம்பளத்தை குறைத்துக்கொண்ட நடிகர் அஜித்.. பிடிவாதம் பிடிக்கும் தயாரிப்பாளர்கள்.. AK 64 அறிவிப்பு எப்போது? | Actor Ajith Kumar Has Adjusted His Remuneration

இப்படி தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில், இறுதியில் என்ன நடக்கப்போகிறது என்று தெரியவில்லை. விரைவில் அஜித்தின் அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என காத்திருக்கும் ரசிகர்கள் அஜித் நல்ல செய்தி சொல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.   

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US