பெரியவர்களிடம் கனிவாக நடந்துகொண்ட அஜித்.. விமான நிலையத்தில் நடந்த விஷயம், வீடியோ இதோ
நடிகர் அஜித் குமார்
திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இதை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறதாம். மேலும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து இளம் நடிகை ஸ்ரீலீலா நடிக்கப்போவதாக கூறப்படுகிறது.

நடிகர் அஜித் பொது இடத்திற்கு வரும்போதெல்லாம் அவரை சுற்றி பெரும் கூட்டம் சூழ்ந்துவிடும். சமீபத்தில் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வந்தபோது கூட அவரை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் கூட்டம் வந்தது.
கனிவாக நடந்துகொண்ட அஜித்
அதே போல் விமான நிலையத்திலும் அஜித் எப்போது வந்தாலும், அவருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள, அவரிடம் பேச ரசிகர்கள் ஆர்வமாக இருப்பார்கள். அந்த வகையில் சமீபத்தில் விமான நிலையத்திற்கு வந்த அஜித்தின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

இதில் பெரியவர்களிடம் கனிவாக நடந்துகொண்ட அஜித், ரசிகர்களிடம் சிரித்துக்கொண்டே பேசி வந்தார். அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
Thala #Ajith unseen video ? #VidaaMuyarchi .. #AjithKumar#Ajithkumar? #GoodBadUgly pic.twitter.com/dU6TQpRAh3
— ?Harry Billa? (@Billa2Harry) April 26, 2024
சவுதியில் தமிழருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை: இந்திய பிரதமர் மோடிக்கு இலங்கை எம்.பி கோரிக்கை News Lankasri