அஜித்தின் 63வது படத்தை இயக்கப்போவது இந்த இயக்குனரா?- எதிர்ப்பார்க்கும் ரசிகர்கள்

Yathrika
in திரைப்படம்Report this article
அஜித் படங்கள்
நடிகர் அஜித் சினிமாவில் படங்கள் நடிப்பது, தனது கனவை நோக்கி பயணம் செய்வது என பிஸியாக இருக்கிறார். அண்மையில் சுற்றுலா முடிந்து இற்தியா திரும்பிய அவர் துணிவு படப்பிடிப்பில் கலந்து கொண்டு படப்பிடிப்பை முடித்துள்ள அவர் டப்பிங் வேலைகளையும் ஒருபக்கம் செய்து வருகிறார்.
இதில் நடித்துள்ள மஞ்சு வாரியர், அமீர் போன்றவர்கள் டப்பிங் பணிகளை முடித்துள்ளோம் என பதிவுகள் போட்டு வந்தனர்.
தற்போது டுவிட்டரில் ரசிகர்கள் இன்று கண்டிப்பாக துணிவு படத்தின் சிங்கிள் டிராக் பற்றி தகவல் வரும் என எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
புதிய படம்
இந்த நேரத்தில் தான் அஜித்தின் 63வது படம் குறித்து சில தகவல்கள் வருகின்றன. அதாவது அஜித்தின் 62வது படம் லைகா நிறுவனம் தயாரிக்க விக்னேஷ் சிவன் இயக்கப்போவது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
இப்படத்தை தொடர்ந்து அஜித் தனது 63வது படத்திற்காக விஷ்ணு வர்தனுடன் இணைய இருப்பதாக கூறப்படுகிறது, ஆனால் எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. இவர்கள் இருவரும் இதற்கு முன் பில்லா மற்றும் ஆரம்பம் படங்களில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பிக்பாஸ் பிரபலத்தை நேரில் சந்தித்துள்ள ஜி.பி.முத்து- யாரை தெரியுமா?