தளபதி விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. இதோ முழு விவரம்
தளபதி விஜய்
நடிகர் விஜய் தற்போது அரசியல் கட்சி தலைவராகிவிட்டார். இதனால் தான் இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்றும் அவர் அறிவித்திருக்கிறார். என்னதான் அவர் சினிமாவிலிருந்து விலகினாலும், வருடத்திற்கு ஒரு படமாவது நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். அதை நாம் 2026 தேர்தலுக்கு பின் பார்ப்போம்.

ஆனால், அதற்கு முன் ஜனநாயகன் படத்தை திரையரங்கில் கொண்டாடலாம் என எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக படம் ரிலீஸ் ஆகவில்லை. தணிக்கை சான்றிதழ் கிடைக்காத காரணத்தினால் படம் வெளிவரவில்லை.

இந்த நிலையில், இதற்கான வழக்கு நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் நிலையில், வருகிற 20ஆம் தேதி இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் முடிவெடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம் அன்று என்ன நடக்கப்போகிறது என்று.
சொத்து மதிப்பு
திரையுலக நட்சத்திரங்களின் சொத்து மதிப்பு விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளிவரும். அந்த வகையில் தளபதி விஜய்யின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

2026ஆம் ஆண்டில் நடிகர் விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 600 கோடி. இவர் தனது கடைசி படமான ஜனநாயகன் படத்திற்காக ரூ. 220 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.