22 வயதில் என் அப்பாவை இழந்தேன்.. அதன்பின்... மனம் திறந்து பேசிய நடிகர் அர்ஜுன்..
அர்ஜுன்
தென்னிந்திய திரையுலகில் ஆக்ஷன் கிங் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் அர்ஜுன். ஜெய்ஹிந்த், ஜென்டில்மேன், முதல்வன் என பல சூப்பர்ஹிட் படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். மேலும் இரும்பு திரை, லியோ, விடாமுயற்சி போன்ற படங்களில் வில்லனாகவும் பட்டையை கிளப்பி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தீயவர் குலை நடுங்க. திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வெளியான இப்படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

மனம் திறந்த அர்ஜுன்
திரையுலக நட்சத்திரங்கள் தங்களது வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்கள் குறித்து அவ்வப்போது மனம் திறந்து பேட்டிகளில் பேசுவார்கள். இந்த நிலையில், நடிகர் அர்ஜுன் பேட்டி ஒன்றில் தனது தந்தையின் மறைவுக்கு பின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பது குறித்து பேசியிருக்கிறார்.

"என்னுடைய 22 வயதில் என் அப்பாவை இழந்தேன். அப்போது தமிழ் நாட்டில்தான் இருந்தேன். எனக்கு இங்கு ஒன்றும் புரியவில்லை. நடிப்பு கூட அப்போது எனக்கு சரியாக வரவில்லை. உடம்பு நன்றாக உள்ளது என்று சினிமாவில் வாய்ப்பு கொடுத்து கொண்டிருந்தார்கள். அப்பா இறந்த பிறகு குடும்ப சுமை என் தோள்களில் வந்துவிட்டது. அதில் பாதி சுமையை எங்கள் அம்மா தான் எடுத்துக்கொண்டாங்க. எங்க எல்லாரையும் ஒரு ஆளாக்கி விட்டது அவங்க தான்" என கூறியுள்ளார்.