48வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் அருண் விஜய்யின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா?
அருண் விஜய்
ஹீரோ - வில்லன் என இரண்டிலும் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் அருண் விஜய். 30 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணித்து வரும் இவர் என்னை அறிந்தால் படத்தின் மூலம் கம் பேக் கொடுத்தார்.

அதுவரை ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்த அருண் விஜய், அதன்பின் வில்லனாகவும் கொண்டாடப்பட்டார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தடம், குற்றம் 23, செக்க சிவந்த வாரம், மிஷன் சாப்டர் 1 போன்ற படங்களில் நடித்தார்.

இந்த ஆண்டு இவர் நடிப்பில் வணங்கான் மற்றும் இட்லி கடை என இரண்டு படங்கள் வெளிவந்தன. இதை தொடர்ந்து அடுத்ததாக ரெட்ட தல படம் வெளிவரவுள்ளது. இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சொத்து மதிப்பு
இன்று நடிகர் அருண் விஜய்க்கு 48வது பிறந்தநாள். ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அருண் விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 85 கோடி முதல் ரூ. 98 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இவர் ஒரு படத்தில் நடிக்க ரூ. 5 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாகவும் தகவல் தெரிவிகிறது.