எனக்கு மரணம் கூட நேரிடலாம்.. சிறுத்தை சிவாவின் தம்பி உருக்கம்
பாலா
அஜித் நடிப்பில் வெளியான வீரம் படத்தில் அவருக்கு தம்பியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் பாலா.
இவர் தமிழ் படங்களை விட மலையாளம் மொழி படங்களில் தான் அதிகமாக நடித்துள்ளார். பாலா, பிரபல இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியும் ஆவார்.
மரணம் கூட நேரிடலாம்..
சமீபத்தில் பாலாவிற்கு கல்லீரல் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் பாலா தனது திருமண நாளை மனைவியுடன் கொண்டாடியுள்ளார்.
இதன் பின்னர் ரசிகர்களிடம், உங்கள் அனைவருடைய பிரார்த்தனையால் தற்போது மீண்டு வந்துள்ளேன். இனி எனக்கு மூன்று நாட்கள் கழித்து முக்கியமான அறுவை சிகிச்சை ஒன்று இருக்கிறது. இந்த சிகிச்சையின் போது என்னுடைய உயிர் கூட போகலாம். ஆனால் உங்களுடைய பிரார்த்தனையால் பிழைத்து கொள்ள நிறைய வாய்ப்பு இருக்கிறது" என்று பாலா உருக்கமாக கூறியுள்ளார்.
எங்களை பார்த்தால் அவுங்களுக்கு பிடிக்கல.. திரையரங்கில் அனுமதி மறுக்கப்பட்ட நரிக்குறவர் மக்கள் உருக்கம்.