எங்களை பார்த்தால் அவுங்களுக்கு பிடிக்கல.. திரையரங்கில் அனுமதி மறுக்கப்பட்ட நரிக்குறவர் மக்கள் உருக்கம்.
பத்து பல
நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல திரைப்படம் என்று வெளியானது. இப்படத்தின் முதல் காட்சி 8 மணிக்கு திரையிடப்பட்டது.
பத்து தல படத்தை பார்க்க சென்ற நரிக்குறவர் மக்களுக்கு ரோகினி தியேட்டரில் அனுமதி மறுக்கப்பட்டது. இது குறித்து வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதற்கு இணையவாசிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
உருக்கம்
இந்நிலையில் இது குறித்து பேசிய பாதிக்கப்பட்ட நரிக்குறவர் மக்கள், "பத்து தல படத்தை பார்க்க ஆசையாக வந்தோம் ஆனால் படத்தை பார்க்க அனுமதி மறுக்கப்பட்டது. மேலும் விஜய், அஜித் படத்திற்கும் இது போன்று தான் எங்களுக்கு நடந்தது. அவுங்களுக்கு எங்களை பார்த்தால் பிடிக்கவில்லை போல" என்று உருக்கமாக நரிக்குறவர் மக்கள் பேசியுள்ளனர்.
டிக்கெட் இருந்தும் உள்ளே விடாத கொடுமை.. தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறதா Rohini Theatre? | Pathu Thala
— IBC Tamil (@ibctamilmedia) March 30, 2023
IBC Tamil Face Book Page Link : https://t.co/yfbTSy7yrD#IBCTamil #RohiniTheatre #PathuThalaFDFS #SilambarasanTR #PathuThalaFromToday #SilamabarasanTR #PathuThalaBlockBuster pic.twitter.com/ygI5qUQtW5
கப்ஜா திரைப்படம் தமிழ் நாட்டில் இத்தனை லட்சம் தான் வசூல் செய்ததா? வெளியான புதிய தகவல்