ஊரை விட்டு போகிறேன்.. சிறுத்தை சிவாவின் தம்பி எடுத்த அதிரடி முடிவு
இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியும் நடிகருமான பாலா - வீரம், அண்ணாத்த போன்ற சில படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக அவர் மலையாள சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
உன்னி முகுந்தன் தயாரித்து நடித்து ரிலீஸான 'Shefeekkinte Santhosham' என்ற மலையாள படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
சம்பள சர்ச்சை
படத்தின் தயாரிப்பாளர் தொழில்நுட்ப கலைஞர்களுக்கு சரியாக சம்பளம் கொடுக்கவில்லை என பேட்டியில் கூறியுள்ளார் நடிகர் பாலா.
இதற்கு பதில் அளித்த படத்தின் தயாரிப்பாளர் படத்தில் பணியாற்றியவர்களுக்கும், நடித்தவர்களுக்கும் முறையான சம்பளத்தை கொடுத்துள்ளேன் என வங்கிக்கணக்கு ஆதாரங்களை இணையத்தில் வெளியிட்டார். இந்த விவகாரம் பெரிய பிரச்சனையாக மாறி இருக்கிறது.

நான் சென்னை செல்கிறேன்
இந்நிலையில் தற்போது பாலா, "நான் சென்னை செல்கிறேன். எனக்கு இங்கு தங்க விருப்பம் இல்லை. தொடர்ந்து நடந்த பல சம்பவங்களால் நான் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன்.
மேலும் இப்படத்தில் வேலைசெய்த தொழில்நுட்ப கலைஞர்கள் தான் என்னிடம் சம்பள பிரச்னையை பற்றிப் பேசினார்கள். ஆனால் இப்போது அவர்கள் அமைதியாகிவிட்டனர். இந்த விஷயத்தில் என்னை மட்டும் குற்றவாளி போல சித்தரிக்கிறார்கள்" என கூறினார்.

பதான் படத்திற்கு வரும் எதிர்ப்புகள் -பதிலடி கொடுத்த ஷாருக்கான்