சன் டிவி புனிதா சீரியலில் இருந்து வெளியேறியுள்ள நடிகர்... அவருக்கு பதில் இனி இவர்தான்
புனிதா சீரியல்
சீரியல்களுக்கு பெயர் போன சன் டிவியின் டிஆர்பியை முந்த இதுவரை எந்த தொலைக்காட்சியும் வரவில்லை. சில வாரங்கள் முதல் இடத்தை பிடித்தாலும் பல மாதங்கள் சன் டிவி தொடர்கள் தான் ராஜ்ஜியம் செய்கின்றன.
சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே, கயல், மூன்று முடிச்சு, மருமகள், எதிர்நீச்சல் தொடர்கிறது போன்ற தொடர்கள் டிஆர்பியின் உச்சத்தில் ஒளிபரப்பாகி வருகிறது.
மாற்றம்
தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு தொடரில் நாயகன் மாற்றம் குறித்த தகவல் வந்துள்ளது.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் 14ம் தேதி தொடங்கப்பட்ட சீரியல் புனிதா. அம்மா-மகளின் பாசத்தை உணர்த்தும் தொடராக ஒளிபரப்பாக தொடங்கி இப்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நேரத்தில் சீரியலில் இருந்து நாயகன் கார்த்திக் விலகியுள்ளார், என்ன காரணம் என தெரியவில்லை.
அவருக்கு பதில் இனி சுரேந்தர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது.
இதோ புதிய நாயகன் போட்டோ,