மறைந்த பிரபல நடிகர் கொச்சி ஹனீபாவின் வாழ்க்கை வரலாறு!! இதோ..
வில்லன், காமெடியன் எனப் பல ரோலில் நடித்து தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகர் கொச்சி ஹனீஃபா. தற்போது அவரின் வாழ்க்கை வரலாற்றை பற்றி பார்க்கலாம் வாங்க.
பிறப்பு
ஏபி முஹம்மது மற்றும் ஹாஜிரா தம்பதியருக்கு இரண்டாவது மகனாக பிறந்தார் ஹனீஃபா. இவர் கொச்சி செயின்ட் அகஸ்டின் பள்ளியில் படித்தார். கல்லூரி படிப்பை செயின்ட் ஆல்பர்ட்டில் பல்கலைக்கழகத்தில் முடித்தார்.
குடும்பம்
கொச்சி ஹனீஃபாபா ஃபாசிலாவை என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சஃபா மற்றும் மர்வா என்ற இரட்டை மகள்கள் உள்ளனர்.
சினிமா வாழ்க்கை
கடந்த 1972 -ம் ஆண்டு விஜயன் இயக்கத்தில் வெளியான ஆழிமுகம் என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் கொச்சி ஹனீபா.
இதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர், கமலுடன் சேர்ந்து மகாநதி படத்தில் நடித்து தமிழில் பாப்புலர் ஆனார். கொச்சி ஹனீபா மலையாளத்தில் மட்டும் 300 -ம் படங்களுக்கும் மேல் நடித்துள்ளார்.
சினிமாவிற்கு வந்த புதிதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து கொச்சி ஹனீபா மெல்ல மெல்ல நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கினார். இவர் கடைசியாக தமிழில் ஆர்யா நடிப்பில் வெளிவந்த மதராசபட்டினம் படத்தில் நடித்து இருப்பார்.
மரணம்
கல்லீரல் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்த கொச்சி ஹனீபா, கடந்த 2010 -ம் ஆண்டு உடல்நலக்குறைவால் மரணம் அடைந்தார்.