’டெல்லி கணேஷ்’ என இதனால் தான் பெயர் வந்தது! நிஜ பெயர் என்ன தெரியுமா?
டெல்லி கணேஷ்
எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அற்புதமாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் டெல்லி கணேஷ். இவர் இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் 1976 -ம் ஆண்டு வெளியான பட்டினப் பிரவேசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
ஆரம்ப காலகட்டத்தில் சில படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும், உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த நாயகன் படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தார். தற்போது வரை டெல்லி கணேஷ் 300-கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இது தான் காரணம்
சமீபத்தில் இவர் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ளார். அதில் அவரிடம், உங்களுக்கு டெல்லி கணேஷ் என்ற பெயர் வர காரணம் என்ன என கேட்டனர். பதில் அளித்த அவர், " என்னை சினிமாவில் அறிமுகம் செய்தவர் திரு. பாலச்சந்தர். என்னிடம் அவர், சினிமாவிற்கு தகுந்த மாதிரி உன் பெயரை மாற்றிக்கொள் என்று கூறினார். அப்போது நான் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தேன்.
அந்த நேரத்தில் பாலச்சந்தர் என்னிடம் 'நீ டெல்லியில் பல நாடகங்களில் நடித்திருப்பதால் உன் பெயரை டெல்லி கணேஷ் என்று வைத்துகொள் என்றார். நானும் அவர் சொன்னவாறு பெயரை மாற்றிவிட்டேன். மேலும் என்னுடைய நிஜ பெயர் கணேசன் தான்" என்று கூறினார்.
நடிகை ஸ்ரீப்ரியாவின் மகள் மற்றும் மகனை பார்த்தீர்களா?- இதோ அழகிய குடும்ப போட்டோ