Dhanush 42nd birthday: நடிகர் தனுஷின் மொத்த சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா
தனுஷ் பிறந்தநாள்
நடிகர் தனுஷின் 42வது பிறந்தநாள் இன்று. அவருக்கு ரசிகர்களுக்கும் திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் மூலம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
நடிகர், தயாரிப்பாளர், பாடகர், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முக திறமை கொண்டவர் தனுஷ். தனது திரை வாழ்க்கையின் துவக்கத்தில் பல அவமானங்களையும், கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டு முன்னணி நடிகராக உயர்ந்தார்.
வெற்றிமாறன், அனிருத் போன்ற பல திறமையானவர்களை சினிமாவிற்கு அறிமுகம் செய்துள்ளார். கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை கலைக்கிக்கொண்டு இருக்கிறார். அடுத்ததாக இட்லி கடை, Tere Ishk Mein, D54, D55 மற்றும் D56 என தொடர்ந்து பல திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.
சொத்து மதிப்பு
இந்த நிலையில், தனுஷின் சொத்து மதிப்பு குறித்து விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, தனுஷின் மொத்த சொத்து மதிப்பு ரூ. 230 கோடிக்கும் மேல் இருக்கும் என்கின்றனர். இவருக்கு போயஸ் கார்டனில் ரூ. 150 கோடி மதிப்புள்ள சொந்தமான வீடு ஒன்று உள்ளது.
இவர் ஒரு திரைப்படத்திற்கு ரூ. 20 கோடி முதல் ரூ. 30 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது. மேலும் தனுஷ் சொந்தமாக Wunderbar எனும் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
ரூ. 7 கோடி மதிப்புள்ள Rolls Royce Ghost, ரூ. 1.65 கோடி Audi A8, ரூ. 3.40 கோடி மதிப்புள்ள Bentley Continental Flying Spur மற்றும் ரூ.1.50 கோடி மதிப்புள்ள Range Rover Sport HSE, ரூ. 1.42 கோடி மதிப்புள்ள Mercedes-Benz S-Class S350 ஆகிய கார்களை தனுஷ் சொந்தமாக வைத்துள்ளார் என தகவல் தெரிவிக்கின்றனர்.
ஆனால், இந்த சொத்து மதிப்பு குறித்து வெளிவந்துள்ள விவரங்கள் அதிகாரப்பூர்வமானது அல்லது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை 100 ஆண்டுகளுக்கு மேல் ஆண்ட கிழக்கிந்திய கம்பெனி - இப்போது உரிமையாளரான இந்தியர் News Lankasri

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
