35வது பிறந்தாளை கொண்டாடும் நடிகை க்ரித்தி சனோன்.. மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா
க்ரித்தி சனோன்
பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் க்ரித்தி சனோன். இவர் 1: Nenokkadine என்கிற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின் பாலிவுட் பக்கம் சென்ற க்ரித்தி சனோனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
தில்வாலே, ஹவுஸ்ஃபுல் 4, மிமி, ஆதிபுருஷ் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார். மேலும் தற்போது தனுஷுடன் இணைந்து Tere Ishk Mein என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்ட நடிகை க்ரித்தி சனோனின் 35வது பிறந்தநாள் இன்று. தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நடிகை க்ரித்தி சனோனுக்கு ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
சொத்து மதிப்பு
இந்த நிலையில், க்ரித்தி சனோனின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 82 கோடி ஆகும். இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க ரூ. 2 கோடி முதல் ரூ. 4 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார். மேலும் விளம்பரங்களில் நடிக்க ரூ. 1 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம்.
அதே போல் இன்ஸ்டாகிராம் மூலம் வருடத்திற்கு ரூ. 12 கோடிக்கும் மேல் வருமானம் ஈட்டி வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர். இதுவே இவருடைய சொத்து மதிப்பு விவரம் என கூறப்படுகிறது. ஆனால், இவை அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

திருமணத்திற்கு முன்பே 6 மாத கர்ப்பம் - மாதம்பட்டி ரங்கராஜ் 2வது திருமணம் - பெண்ணு யார் தெரியுமா? IBC Tamilnadu

மடத்தில் தினமும் ஒரு மணி நேரம் தியானம் செய்யும் முஸ்லிம் பெண் - என்ன சொன்னார் தெரியுமா? IBC Tamilnadu
