மன உளைச்சலில் இருந்த தனுஷ்.. மேடையில் ஓபனாக சொன்ன காரணம்
தனுஷ்
தனுஷ் தற்போது தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடித்து இருக்கும் படம் வாத்தி. தெலுங்கு, தமிழில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் இருக்கும் ஒரு பிரபல தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
விழாவுக்கு தனுஷ் அவரது மகன்களையும் அழைத்து வந்திருக்கிறார்.

மன உளைச்சலில் இருந்த தனுஷ்
மேடையில் பேசிய தனுஷ் வாத்தி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது ஏன் என கூறி இருக்கிறார். கொரோனா லாக் டவுன் நேரத்தில் தான் வெங்கி அட்லுரி இந்த கதையை அவரிடம் சொன்னாராம்.
"அந்த நேரத்தில் நானே வேலை இல்லாமல் மன உளைச்சலில் இருந்தேன், கதை கேட்டுவிட்டு வேண்டாம் என ஏதாவது காரணம் சொல்லலாம் என காத்திருந்தேன். ஆனால் கதை எனக்கு ரொம்ப பிடித்துவிட்டதால் உடனே ஒகே சொல்லிவிட்டேன்" என தனுஷ் கூறி இருக்கிறார்.

படுகாயம் அடைந்து கையில் பெரிய கட்டுடன் இயக்குனர் சுதா கொங்கரா.. ஷாக்கிங் புகைப்படம்