பழம்பெரும் நடிகர் தர்மேந்திராவின் குடும்பம் மற்றும் சொத்து மதிப்பு.. முழு விவரம் இதோ
தர்மேந்திரா பழம்பெரும் இந்திய நடிகர் தர்மேந்திரா தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால், அதற்குள் அவர் இறந்துவிட்டதாக பல வதந்திகள் பரவி வருகிறது.

ஆனால், தனது தந்தையின் உடல்நிலை சீராக இருப்பதாக தர்மேந்திராவின் மகள் ஈஷா தியோல் பதிவு வெளியிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
திரை வாழ்க்கை
Dil Bhi Tera Hum Bhi Tere என்கிற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தர்மேந்திரா. இப்படம் 1960ஆம் ஆண்டு வெளிவந்தது. இதை தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்து வந்தார். இதில் அமிதாப் பச்சனுடன் இவர் இணைந்து நடித்த ஷோலே படம் உலகளவில் வரவேற்பை பெற்றது.

இன்று வரை இப்படத்தை ஆக்ஷன் அட்வென்ச்சர் படங்களுக்கு உதாரணமாக கூறுகிறார்கள். 1960ல் தனது திரை பயணத்தை துவங்கிய இவர், தற்போது வரை நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் அடுத்ததாக Ikkis என்கிற படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

குடும்பம்
1954ஆம் ஆண்டு பிரகாஷ் கௌர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். பின் அவரை விவாகரத்து செய்யாமல் 1980ஆம் ஆண்டு நடிகை ஹேம மாலினியை இரண்டாம் திருமணம் செய்தார். இது அப்போது சர்ச்சையானது.

சன்னி தியோல், பாபி தியோல், ஈஷா தியோல், விஜேதா தியோல், அஹானா தியோல், அஜீதா தியோல் என நடிகர் தர்மேந்திராவிற்கு ஆறு பிள்ளைகள் உள்ளனர். இதில் சன்னி தியோல், பாபி தியோல் மற்றும் ஈஷா தியோல் ஆகியோர் திரையுலகில் பிரபலமான நட்சத்திரங்கள் என்பதை நாம் அறிவோம்.

சொத்து மதிப்பு
பழம்பெரும் நடிகராக வலம் வரும் தர்மேந்திராவின் சொத்து மதிப்பு ரூ. 335 கோடி என கூறப்படுகிறது. இவருக்கு லோனாவாலாவில் சொந்தமாக 100 ஏக்கர் பண்ணை வீடு உள்ளது.

மேலும், மகாராஷ்டிராவில் ரூ. 17 கோடிக்கும் மேல் மதிப்புள்ள ரியல் எஸ்டேட் சொத்துக்களையும், விவசாய மற்றும் விவசாயம் அல்லாத நில முதலீடுகளையும் அவர் வைத்திருக்கிறார் என தகவல் தெரிவிக்கின்றனர்.