ரசிகர்கள் கொண்டாடும் லோகா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது, ஆனால்.. பிரபல நடிகர் வருத்தம்!
Lokah
டொமினிக் அருண் இயக்கத்தில் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த படம் Lokah. இப்படத்தை முன்னணி ஹீரோவான துல்கர் சல்மான் தயாரித்திருந்தார்.
படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நஸ்லன், சாண்டி மாஸ்டர் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
சூப்பர் ஹீரோ கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

வருத்தம்!
இந்நிலையில், மோகன்லாலின் 'ஹிருதயபூர்வம்' படத்தில் கடைசியாக நடித்த பாசில், லோகா படத்தில் தனக்கு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தை வழங்கியதாக கூறினார்.
ஆனால், வேறு படத்தின் வேலைகள் காரணமாக இந்த படத்தில் நடிக்க முடியவில்லை என்று தற்போது வருத்தம் தெரிவித்துள்ளார்.

Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri