இந்தம்மா ஏய் வசனம் மூலம் பிரபலமான எதிர்நீச்சல் மாரிமுத்து மரணம்.. அவருடைய மறுபக்கம் என்ன தெரியுமா?
மாரிமுத்து
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவர் தான் நடிகர் மாரிமுத்து. அந்த சீரியலில் இவர் பேசும் அட எம்மா ஏய் பிரபலமாகி மீம்ஸ் ஆக மாறியது.
புகழ் உச்சத்தில் இருந்த மாரிமுத்து இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவருக்கு வயது வெறும் 57 தான். தற்போது மாரிமுத்துவின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கடந்து வந்த பாதை
இந்நிலையில் மாரிமுத்து குறித்து யாருக்கும் தெரியாத பல விஷயங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.
மாரிமுத்து தேனி மாவட்டத்தின் பசுமலை கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் சிறுவயதில் இருந்து சினிமாவில் ஆர்வம் கொண்டதால் வீட்டை விட்டு சென்னைக்கு ஓடிவந்தார். ஆரம்பத்தில் ஹோட்டல்களில் வேலை செய்துள்ளார்.
பின் நடிகர் ராஜ்கிரண் அரண்மனைக்கிளி மற்றும் எல்லாமே என் ராசாதான் போன்ற படங்களில் உதவி இயக்குநராக இணைந்து பணியாற்றி இருந்தார்.
இதைத்தொடர்ந்து இவர் மணிரத்னம், வசந்த், சீமான், எஸ். ஜே. சூர்யா, சிம்பு எனப் பல இயக்குனர்களுடன் பணியாற்றி இருக்கிறார்.
கடந்த 2008 -ம் ஆண்டு பிரசன்னா நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். ஆனால் இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர்.
நடிகர் அவதாரம்
துணை இயக்குனர், இயக்குனர் என்று வலம் வந்த மாரிமுத்து, மிஸ்கின் நடிப்பில் வெளிவந்த யுத்தம் செய் என்று படத்தின் மூலம் நடிகராகவும் என்ட்ரி கொடுத்தார்.
இப்படத்தை தொடர்ந்து ஆரோகனம், நிமிர்ந்து நில், கொம்பன், மருது, கத்தி சண்டை, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் படத்தில் முக்கியமான ரோலில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருந்தார் என்று சொல்லலாம்.