காமெடி நடிகர் கஞ்சா கருப்புக்கு இப்படியொரு சோகமா?- இப்போது இந்த நிலைமை தானா?

Yathrika
in பிரபலங்கள்Report this article
நடிகர் கஞ்சா கருப்பு
பாலா இயக்கிய பிதாமகன் படத்தில் சிறு வேடத்தில் நடித்து தனது சினிமா பயணத்தை தொடங்கியலர் நடிகர் கஞ்சா கருப்பு. அதன்பிறகு சுப்ரமணியபுரத்தில் குணச்சித்திர வேடத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
விக்ரம், சூர்யா, விஜய், ஜீவா, தனுஷ், விஷால், சசிக்குமார், அருண் விஜய் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்துள்ள கஞ்சா கறுப்பு 2010ம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
தயாரித்த படம்
2014ம் ஆண்டு முருகன் போர்வெல்ஸ் என்ற திரைப்படத்தை தயாரித்திருந்தார். சினிமாவில் சம்பாதித்த பணம் அனைத்தையும் போட்டு இப்படத்தை தயாரிக்க படம் சரியான வசூலை பெறவில்லை, தோல்வியில் முடிந்தது.
இதனால் சொந்த வீடு, கையில் இருந்த பணம் அனைத்தையும் இழந்து இப்போது வாடகை வீட்டில் வசித்து வருகிறாராம் கஞ்சா கறுப்பு. அவ்வப்போது கிடைக்கும் படங்களில் நடித்து வருகிறாராம்.
அஜித்தின் துணிவு Vs விஜய்யின் வாரிசு- UKவில் அதிகம் டிக்கெட் புக்கிங் ஆனது எந்த படத்திற்கு தெரியுமா?