தனது பெற்றோர் விவாகரத்து செய்தது குறித்து கௌதம் கார்த்திக்- இவ்வளவு கஷ்டப்பட்டாரா?

Yathrika
in பிரபலங்கள்Report this article
கௌதம் கார்த்திக்
நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கிய கடல் படத்தின் மூலம் அறிமுகமானவர் கௌதம் கார்த்திக்.
அப்படத்திற்கு பிறகு என்னமோ ஏதோ, வை ராஜா வை, தேவராட்டம், இவன் தந்திரன், ரங்கூன், 1948, பத்து தல என தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானார்.
இவர் கடந்த ஆண்டு நடிகை மஞ்சிமா மோகனை கிதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் மஞ்சிமா உடல் எடையை குறைத்து வருகிறார், அதற்காக தான் என்னென்ன செய்கிறேன் என்பதையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.
தந்தையின் விவாகரத்து
கௌதம் கார்த்திக் தந்தையும், நடிகருமான கார்த்திக் ராகினி என்பவரை காதலித்து 1988ம் ஆண்டு திருமணம் செய்தார், இவர்களுக்கு கௌதம் கார்த்திக் மற்றும் இன்னொரு மகன் உள்ளார்.
பின் 4 ஆண்டுகளில் ராகினியை விவாகரத்து செய்த கார்த்திக் முதல் மனைவியின் தங்கையை இரண்டாவது திருமணம் செய்தார். இந்த ஜோடிக்கும் ஒரு மகன் இருக்கிறார்.
கௌதம் கார்த்திக் ஒரு பேட்டியில், அப்பா இரண்டாவது திருமணம் செய்ததால் இருவரும் பிரிந்துவிட்டார்கள், நான் தான் தனிமையில் வாடினேன். அப்பா சென்னையில் இருந்ததால் நான் அம்மாவுடன் தான் இருந்தேன்.
இரண்டு வருடத்திற்கு ஒருமுறை அப்பாவிடம் இருந்து போன் வரும், எப்போவாவது தான் பார்க்கவே வருவார்.
சிங்கிள் மதராக இருந்து என் அம்மா தான் எங்களை வளர்த்தார், பல்வேறு பிரச்சனைகள் வந்தாலும் அதையும் மீறி என்னையும், தம்பியையும் வளர்த்தார் என பேசியுள்ளார்.
ரஜினியின் ஜெயிலர் படத்தின் ப்ரீ புக்கிங்- உலகம் முழுவதும் இத்தனை கோடி வசூலா?