நடிகர் கவுண்டமணியா இது, எந்த பிரபலங்களுடன் புகைப்படம் எடுத்துள்ளார் பாருங்க- முதன்முறையாக வெளிவந்த போட்டோ
கவுண்டமணி
இவரது இடத்தை நிரப்ப இப்போது வரை எந்த ஒரு நடிகரும் வரவில்லை. காமெடிக்கு காமெடி, நக்கல் நய்யாண்டி என இவரது டிராக் தனி வகையாக இருக்கும்.
செந்திலுடன் இவர் இணைந்து படங்கள் நடிக்க ஆரம்பிக்க மிகவும் பிரபலமானார், இப்போதும் இவர்களது காமெடிகள் நின்று பேசும்.
ஆனால் இப்போதெல்லாம் கவுண்டமணி படங்கள் நடிப்பது இல்லை, அவரும் மிகவும் உடல எடை குறைந்து ஆளே மாறிப்போய் காணப்படுகிறார்.
அவர் ஒரு திருமண நிகழ்ச்சியில் மெதுவாக நடந்து வந்ததை பார்த்து மக்கள் மிகவும் வருந்தினார்கள்.
பிரபலங்களுடன் கவுண்டமணி
நடிகையும், அரசியல்வாதியுமான நடிகை குஷ்பு தனது சமூக வலைதளங்களில் ஏதாவது புகைப்படங்கள் வெளியிட்ட வண்ணம் இருப்பார்.
அப்படி அவர் சுந்தர்.சி, சத்யராஜ் மற்றும் கவுண்டமணி 3 பேரும் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு தனது கணவரின் பேவரெட் போட்டோ என பதிவு செய்துள்ளார்.
The three musketeers from Coimbatore. My hubby's fav pic..#Goundamani anna#Satyaraj Sir#SundarC pic.twitter.com/9hfdsk8tWX
— KhushbuSundar (@khushsundar) March 9, 2023
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகியது ஏன்?- சாய் காயத்ரியின் பதில்