பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து விலகியது ஏன்?- சாய் காயத்ரியின் பதில்
பாண்டியன் ஸ்டோர்ஸ்
தமிழ் சின்னத்திரையில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன்-தம்பிகள் என கூட்டுக் குடும்பத்தை விவரிக்கும் ஒரு கதையாக தொடர் ஒளிபரப்பாகிறது.
சில சமயம் விறுவிறுப்பாக ஓடுகிறது, ஒருசில நேரத்தில் கதையில் மிகவும் டல் அடிக்கின்றனர். தற்போது கர்ப்பமாக இருப்பதை வைத்தே 2, 3 வாரங்களை கடந்துவிட்டார்கள்.
காயத்ரி கூறிய காரணம்
தற்போது இந்த தொடரில் கண்ணனுக்கு ஜோடியாக நடித்து வந்தவர் சாய் காயத்ரி. இவர் தொடரில் இருந்து வெளியேறிவிட்டாராம்.
நேற்று இந்த தகவல் வெளியேற எதற்காக சீரியலில் இருந்து வெளியேறினேன் என்பதை காயத்ரி இன்ஸ்டாவில் பதிவு போட்டுள்ளார்.
அதில் அவர், நான் சீரியலில் இருந்து விலகிவிட்டேன். ஐஸ்வர்யா கதாபாத்திரத்தின் கதை போக போக எனக்கு சரியாக தோன்றவில்லை. அது எனது சினிமா பயணத்திற்கு சரியாக வராது என தோன்றியது என பதிவு செய்துள்ளார்.
கணவரை விவாகரத்து செய்ய முடிவெடுத்த பிக் பாஸ் அர்ச்சனா! திருமணமாகி 20 வருடம் கழித்து அதிர்ச்சி

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
