50-வது திருமண நாளை குடும்பத்துடன் கொண்டாடிய நடிகர் ஜெயம் ரவியின் அம்மா - அப்பா! புகைப்படத்துடன் இதோ
ஜெயம் ரவி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் பிரம்மாண்ட வெற்றியடைந்தது.
மேலும் அடுத்தடுத்து அவரின் நடிப்பில் சில முக்கிய திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன. அதன்படி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாக இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவியின் தாய் மற்றும் தந்தை தங்களின் 50-வது திருமண நாளை கொண்டாடியுள்ளனர். இதற்காக ஒட்டுமொத்த குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துள்ளனர்.
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ஜெயம் ரவி அவரின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். மேலும் அவரின் அண்ணன் மோகன் ராஜா, 50 வருடங்களுக்கு முன்பு அவர்களுக்கு திருமணமான அதே இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என குறிப்பிட்டுள்ளார்.
At the same place of their marriage 50 years ago on 17/11/1972 ? #thiruthani https://t.co/Osuh07xNKc
— Mohan Raja (@jayam_mohanraja) November 17, 2022
பிக்பாஸ் 6வது சீசனில் கண்டிப்பாக அவர் தான் ஜெயிப்பார்- மகேஷ்வரி ஓபன் டாக்