ஜெயராம் மகனை தொடர்ந்து சினிமாவில் அறிமுகமாகும் அவரது மகள்- இப்போது எப்படி உள்ளார் பாருங்க
மலையாள சினிமாவில் ஏகப்பட்ட படங்கள் நடித்து முன்னணி நடிகராக ஒரு காலததில் வலம் வந்தவர் ஜெயராம்.
இவர் மலையாளத்தை தாண்டி தமிழிலும் நிறைய ஹிட் படங்கள் கொடுத்திருக்கிறார். அதிலும் கமல்ஹாசனுடன் இவர் நடித்த படங்கள், அதில் வரும் காமெடிகளை யாராலும் மறக்க முடியாது.
ஜெயராம் படங்கள்
முறைமாமன், கோகுலம், தெனாலி, பஞ்ச தந்திரம், ஏகன், துப்பாக்கி உள்ளிட்ட படங்களில் இவரது கதாபாத்திரம் முக்கியமாக பார்க்கப்படும். தற்போது மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

ஜெயராம் மகன், மகள்
தற்போது ஜெயராம் குடும்பத்தில் உள்ள 4வது நபரும் சினிமாவில் நடிக்க வருகிறார். ஜெயராம் மனைவி பார்வதியும் தமிழ், மலையாளம் படங்களில் நடித்துள்ளார்.
ஜெயராம் மகன் காளிதாஸ் ஜெயராம் தமிழில் ஒரு பக்க கதை என சில படங்களே நடித்திருக்கிறார், ஆனால் மலையாளத்தில் ஏகப்பட்ட படங்கள் உள்ளன.
தற்போது ஜெயராமின் மகள் மாளவிகாவும் சினிமாவிற்கு வருவதாக கூறப்படுகிறது. மலையாள இயக்குனர் வினித் சீனிவாசன் இயக்கத்தில் மாளவிகா நடிக்க இருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடிசை வீட்டில் இருக்கும் பிக்பாஸ் புகழ் தாமரைக்கு புதிய வீடு கட்டித்தரும் பிரபலம்- யாரு பாருங்க
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan
இந்தியா உட்பட பல சர்வதேச மாணவர்களின் admission offer-களை திரும்பப்பெறும் பிரித்தானிய பல்கலைக்கழகங்கள் News Lankasri