சிறுவனாக பார்த்த நடிகர் ஜீவாவின் மகனா இது! எப்படி வளர்ந்து விட்டார் பாருங்க, புகைப்படம் இதோ
ஜீவா
தமிழ் சினிமாவில் திறமையான நடிகர்களில் ஒருவர் ஜீவா. இவர் ராம், கற்றது தமிழ், சிவா மனசுல சக்தி, கோ, பிளாக், என்றென்றும் புன்னகை என பல நல்ல திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.

இவர் நடிப்பில் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவந்து மாபெரும் வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளது தலைவர் தம்பி தலைமையில். மலையாள இயக்குநர் நிதீஷ் சஹதேவ் இப்படத்தை இயக்கியிருந்தார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த இப்படம் வசூல் வாரிக்குவித்தது.

இந்த வெற்றியை நேற்று மாலை படக்குழுவினர் இணைந்து கொண்டாடினார்கள். இதில் படக்குழுவை சாராத மற்ற திரையுலக நட்சத்திரங்களும் கலந்துகொண்டு இப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர்.
ஜீவாவின் மகன்
தலைவர் தம்பி தலைமையில் பட வெற்றி விழாவில் நடிகர் ஜீவா தனது மகனை மேடைக்கு அழைத்தார். அப்போது மேடைக்கு வந்த அவரது மகனை பார்த்து அனைவரும் ஆச்சரியப்பட்டனர். சிறுவனாக பார்த்த ஜீவாவின் மகனா இது? ஜீவாவின் மகனா இல்லை ஜீவாவின் சகோதரரா என ஆச்சரியப்பட்டுள்ளனர்.
இதோ அவருடைய புகைப்படம்:
