ஜித்தன் ரமேஷிற்கு இப்படி ஒரு பிரச்சனையா, பிக்பாஸில் அப்படி நடக்க இதுதான் காரணமா?- அவரே கூறிய தகவல்
ஜித்தன் ரமேஷ்
பிரபல தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி மகன் என்ற அடையாளத்துடன் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் ஜித்தன் ரமேஷ்.
நடிக்க வந்து சில படங்களே நடித்த இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் எப்போதும் தூங்கிக் கொண்டும், சுறுசுறுப்பு இல்லாமல் இருந்தார். சண்டை நடக்கும் இடங்களில் அமைதியாக போவது, சில நேரங்களில் கண்டுகொள்ளாமல் இருப்பது என இருக்க நிறைய மீம்ஸ்கள் வந்தன.
நிகழ்ச்சியில் இருந்தும் மிக விரைவிலேயே வெளியேற்றப்பட்டார்.
நடிகரின் பேட்டி
இந்த நிலையில் ஜித்தன் ரமேஷ் நிகழ்ச்சியில் ஏன் அப்படி இருந்தேன் என பேட்டி கொடுத்துள்ளார்.
அதில் அவர், அப்பா ஒரு தயாரிப்பாளர், தன்னுடைய தம்பி ஒரு முன்னணி நடிகர், தானும் ஒரு நடிகர் அதனால் அந்த வீட்டில் என்னால் ஏதாவது கலவரமோ சண்டையோ ஏற்பட்டால் அது என்னை என் குடும்பத்தை சேர்ந்த மற்றவர்களின் இமேஜையும் பாதிக்கும்.
ஆனால் உண்மையில் என்னுடைய கேரக்டரே வேறு எனக்கு இப்படி ஒரு பின்புலம் இல்லாமல் இருந்திருந்தால் நான் வேற மாதிரி ஆடி இருப்பேன் என்று கூறி இருக்கிறார்.
முத்து பட புகழ் நடிகை சுபஸ்ரீயா இது, படு குண்டாக அடையாளமே தெரியலையே- Latest Click, ஷாக்கான ரசிகர்கள்