தெலுங்கு சினிமா நடிகர் என்.டி.ஆரா இது, உடல் எடை குறைத்து ஆளே மாறிவிட்டாரே.. லேட்டஸ்ட் லுக் போட்டோ வைரல்
சினிமா நடிகர்கள் படங்களுக்காக தங்களது உடல் எடையை ஏற்றுவது, குறைப்பது என வழக்கமாக செய்கிறார்கள்.
அப்படி இப்போது ஒரு நடிகர் உடல் எடையை குறைத்த போட்டோ தான் வைரலாகி வருகிறது.
லேட்டஸ்ட்
தெலுங்கு சினிமாவில் வெளியான ஹிட் படங்களில் ஒன்றாக உள்ளது தேவாரா.
ஜுனியர் என்.டி.ஆர், ஜான்வி கபூர் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த இப்படம் சுமார் ரூ. 500 கோடி வரை வசூலை வாரி குவித்தது.
இந்த படம் ஜப்பான் நாட்டில் கடந்த மார்ச் 28ம் தேதி வெளியாகி அங்கும் மாஸ் காட்டியது.
ஜப்பானில் படத்தின் புரொமோஷன் வேலைகளை முடித்துவிட்டு இந்தியா வரும் போதே ஜுனியர் என்.டி.ஆர் லுக்கில் மாற்றம் தெரிந்தது, அதாவது உடல் எடை குறைந்து காணப்பட்டார்.
இந்த நிலையில் சமீபத்தில் வெளியான அவரது புகைப்படம் செம வைரலாகிறது, சுத்தமாக உடல் எடை குறைத்து ஆளே மாறிவிட்டார். இதோ அவரது போட்டோ,