நடிகர் கமல் ஹாசனின் உண்மையான சொத்து மதிப்பு.. அதில் இத்தனை கோடி கடன் இருக்கிறதா!
கமலின் சொத்து மதிப்பு
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல் ஹாசனின் சொத்து மதிப்பு குறித்து உண்மையான தகவல் வெளியாகியுள்ளது.
கமல் ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த தக் லைஃப் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இது அவருடைய ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
முழு விவரம்
இப்படம் வெளிவந்த அதே நாளில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் கமல் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த வேட்புமனுவுடன் சேர்த்து, தனது சொத்து விவரங்களையும் கமல் ஹாசன் தாக்கல் செய்துள்ளார்.
இதில் அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.59.60 கோடி என்றும், அசையா சொத்துகளின் மதிப்பு ரூ.245.86 கோடி என்றும் தெரிவித்துள்ளார். ரூ.49.67 கோடி கடன் இருப்பதாக சொத்து விவரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மகேந்திரா பொலிரோ, பென்ஸ், BMW, லக்சஸ் ஆகிய 4 கார்கள் தன்னிடம் இருப்பதாக கமல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே கமலின் சொத்து மதிப்பு விவரமாகும்.

மரக்கிளைகளில் சிக்கிய சடலங்கள்... கரைகளில் அழுகும் மீன்கள்: டெக்சாஸ் பேரிடரின் கோர முகம் News Lankasri

12 ஆண்டுகளாக வேலையே செய்யாமல் ரூ.28 லட்சம் சம்பளம் வாங்கிய பொலிஸ்காரர்.., கண்டுபிடித்தது எப்படி? News Lankasri
