நடிகர் கரண்-ஐ உங்களுக்கு நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா
நடிகர் கரண்
சிறு வயதில் இருந்தே நடிக்க துவங்கி பின் ஹீரோவாக மாறியவர் நடிகர் கரண். ஹீரோவாக மட்டுமின்றி வில்லனாகவும் பல திரைப்படங்களில் கலக்கியுள்ளார்.
உலக நாயகன் கமல் ஹாசனுக்கே வில்லனாக நம்மவர் திரைப்படத்தில் நடித்திருந்தார். ஸ்ரீ பண்ணாரி அம்மன், காலமெல்லாம் காத்திருப்பேன், காதல் மன்னன், ராஜகாளி அம்மன் என பல திரைப்படங்களில் நடித்தார்.
90ஸ் கிட்ஸ் மனம் கவர்ந்த நாயகனான இவர், 'ஸுரூவ்' என்கிற மீம் மூலம் 2k கிட்ஸ் மத்தியில் பிரபலமாகிவிட்டார். இவர் கடைசியாக 2016ம் ஆண்டு வெளிவந்த உச்சத்துல சிவா எங்கிற படத்தில் நடித்திருந்தார்.
இப்போது எப்படி இருக்கிறார்
இதன்பின் எந்த ஒரு திரைப்படமும் இவர் நடிக்கவில்லை. ஆனால், ரசிகர்களை கரண் எப்போது மீண்டும் நடிக்க வருவார் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில், நடிகர் கரணின் சமீபத்திய புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
