மல்யுத்த வீரர் John Cenaவை சந்தித்துள்ள நடிகர் கார்த்தி- ஏன் தெரியுமா, லைரலாகும் போட்டோ
நடிகர் கார்த்தி
நடிகர் கார்த்தி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பிரபலத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. சோனி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் உலக மல்யுத்தப் போட்டிக்கான தொடரை நடத்தி வருகிறது.

இன்று ஹைதராபாத்தில் உள்ள காஜிபௌலி உள்விளையாட்டு அரங்கில் சூப்பர் ஸ்டார் ஸ்பெக்கடல் என்ற பெயரில் மல்யுத்தப் போட்டி நடைபெறுகிறது, இதுவே இந்தியாவில் நடக்கும் முதல் WWE போட்டி. இதில் மல்யுத்த வீரரும் நடிகருமான ஜான் சீனா கலந்துகொண்டார்.
அப்போது ஜான் சீனாவை சந்தித்த கார்த்தி அவருடன் புகைப்படம் எடுத்துள்ளார்.
அதனை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து ஜான் சீனா உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி, மிகவும் அன்பாக இருந்ததற்கு நன்றி என பதிவு செய்துள்ளார்.
Sony Sports நடத்தும் இந்த உலக மல்யுத்தப் போட்டிக்கான இந்திய விளம்பரத் தூதராக கார்த்தி உள்ளார்.
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan