பருத்திவீரன் முதல் ஜப்பான் வரை 25 படங்கள் நடித்துள்ள நடிகர் கார்த்தியின் சொத்து மதிப்பு- இத்தனை கோடியா?
நடிகர் கார்த்தி
தமிழ் சினிமாவில் இயக்குனர் ஆக வேண்டும் என்ற கனவோடு மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக சேர்ந்தார் நடிகர் கார்த்தி.
அவர் இயக்கிய ஆயுத எழுத்து திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய கார்த்திக்கு நடிக்கும் வாய்ப்புகள் நிறைய வந்துள்ளன.
அப்படி அவர் முதன்முதலாக பருத்திவீரன் படத்தின் மூலம் நடிகராக களமிறங்கினார், முதல் படமே கிராமத்து பின்னணியில் உருவாகி வெளியாக செம வெற்றிப்படமாக அமைந்தது.
எல்லோரும் அதைதான் பார்க்கிறார்கள், மன வருத்தத்தில் வீட்டில் முடங்கிய பிரபலம்- பிரபல நடிகைக்கு ஏற்பட்ட சோகம்
அடுத்து பையா என்ற படத்தில் நடித்து மாஸ் வெற்றி கண்ட இவர் நான் மகான் அல்ல, சிறுத்தை என நடித்தார். ஒவ்வொரு படத்துக்கு வித்தியாசம் காட்டி நடித்துவந்த கார்த்தி நடிப்பில் கடைசியாக ஜப்பான் திரைப்படம் வெளியாகி இருந்தது.
சொத்து மதிப்பு
படத்துக்கு படம் அசுர வளர்ச்சி கண்ட நடிகர் கார்த்தியின் சொத்து மதிப்பு கிட்டத்தட்ட ரூ. 100 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
சினிமாவில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர் கார்த்தி உழவன் என்ற அறக்கட்டளை மூலம் விவசாயிகளுக்கு தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வருகிறார்.