முன்னணி இயக்குனர்களுடன் கூட்டணி வைத்துள்ள கார்த்தி.. இதோ முழு விவரம்
கார்த்தி
பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் தான் கார்த்தி. முதல் படமே மெகா ஹிட்டாக கார்த்தியின் நடிப்பும் அனைவரையும் பிரமிக்க வைத்தது.
இப்படத்தை தொடர்ந்து இவர் நடித்த பல படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது. குறிப்பாக கார்த்தி கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
ஆனால் சமீபத்தில் கார்த்தி நடிப்பில் ஜப்பான் திரைப்படம் வெளிவந்தது. இந்த படத்திற்கு கலவையான விம்சரணமே வந்தது குறிப்பிடத்தக்கது.
லைன் அப்
தற்போது கார்த்தி பல முன்னணி இயக்குனர்களுடன் கூட்டணி வைத்துள்ளார். அவரது லைன் அப் பற்றி பாக்கலாம் வாங்க.
கார்த்தி 26 -வது படத்தை நலன் குமாரசாமி இயக்குகிறார். கார்த்தி 27 -வது பிரேம் குமார் (96 பட இயக்குனர்) இயக்கவுள்ளார்.
இதையடுத்து லோகேஷ் கனகராஜ், ஹெச் வினோத், பாண்டியராஜ் போன்ற இயக்குனர்களுடன் கூட்டணி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.